வரி குறைப்பு, முதலீடுகளை குவிக்கும் - இந்திய ஏற்றுமதி அமைப்பு கருத்து


வரி குறைப்பு, முதலீடுகளை குவிக்கும் - இந்திய ஏற்றுமதி அமைப்பு கருத்து
x
தினத்தந்தி 20 Sep 2019 7:42 PM GMT (Updated: 20 Sep 2019 7:42 PM GMT)

வரி குறைப்பு, முதலீடுகளை குவிக்கும் என இந்திய ஏற்றுமதி அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மேற்கொண்ட பெருநிறுவனங்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கையை இந்திய ஏற்றுமதி அமைப்பு வரவேற்றுள்ளது.

இதுபற்றி அந்த அமைப்பின் தலைவர் சரத்குமார் கருத்து தெரிவிக்கையில், “உள்நாட்டு நிறுவனங்களுக்கான வரியை 22 சதவீதமாகவும், புதிய நிறுவனங்களுக்கான வரியை 15 சதவீதமாகவும் குறைத்திருப்பது, அன்னிய நேரடி முதலீடுகள் மற்றும் உள்நாட்டு முதலீடுகளை குவிக்கும்” என கூறினார்.


Next Story