மருமகளை வரதட்சணை கொடுமை செய்த ஓய்வு பெற்ற நீதிபதி- குடும்பம் - வீடியோ


மருமகளை வரதட்சணை கொடுமை செய்த ஓய்வு பெற்ற நீதிபதி- குடும்பம் - வீடியோ
x
தினத்தந்தி 21 Sept 2019 10:58 AM IST (Updated: 21 Sept 2019 1:19 PM IST)
t-max-icont-min-icon

மருமகளை வரதட்சணை கொடுமை செய்த ஓய்வு பெற்ற நீதிபதி குடும்பம் அது குறித்த சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.

ஐதராபாத்

ஓய்வுபெற்ற ஐதராபாத் உயர்நீதிமன்ற நீதிபதி நூட்டி ராமமோகன ராவ், அவரது மனைவி மற்றும் அவரது மகன், மருமகளுக்கு எதிராக  வன்முறையில் ஈடுபட்டதாக அதிர்ச்சியூட்டும் சி.சி.டி.வி காட்சிகள் வெளிவந்துள்ளன.

வீடியோவில் உள்ள நேரம் ஏப்ரல் 20, 2019 அன்று இரவு 11 மணி என காட்டுகிறது. வீடியோவில் நான்கு பேர் காணப்படுகிறார்கள் - ஒரு இளைய ஜோடி மற்றும் ஒரு வயதான ஜோடி. திடீரென்று, இளையவர்  அவரது மனைவியை கீழே தள்ளி  தாக்குகிறார்.

அவன் அவளை ஒரு படுக்கையில் தள்ளுகிறான். அந்தப் பெண் பதிலளிக்க எழுந்த போதும்  அந்த  வயதான மனிதன் அவளைக் கைகளால் தடுத்து நிறுத்த முயன்று அவளை மீண்டும் படுக்கையில் தள்ளுகிறார்.  தொடர்ந்து  ஆக்ரோஷமாக அந்த பெண்ணுடன் பேசுகிறார்கள்.

மற்றொரு வீடியோவில், குடும்பம் சிந்துவை வெளியே இழுத்து வருகின்றனர்.  இது நள்ளிரவில் நடக்கிறது.  அந்த பாதிக்கப்பட்ட பெண்  சோர்வாகவும், பலவீனமாகவும் இருக்கிறார். ஆதரவிற்காக தன் குடும்பத்தினரின் கைகளைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

நீதிபதி நூட்டி ராமமோகன ராவ் ஐதராபாத் உயர்நீதிமன்றத்திலும், சென்னை  உயர்நீதிமன்றத்திலும் பணியாற்றி உள்ளார். 2017 இல் ஓய்வு பெற்றார்.

கடந்த  ஏப்ரல் மாதம், நீதிபதி (ஓய்வு) ராமமோகன ராவ், அவரது மனைவி நூட்டி துர்கா ஜெயலக்ஷ்மி மற்றும் அவர்களது மகன் - அவரது கணவர் நூட்டி வசிஸ்டா - வரதட்சணை கோரி தன்னை அடித்ததாக சிந்து சர்மா குற்றம் சாட்டியிருந்தார்.

 அப்பல்லோ மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்ட மருத்துவ சான்றிதழ்படி, சிந்துவின்  இடது பக்க மார்பில் கீறல்கள், இடது மார்பகம் மற்றும் மேல் உதட்டின் மீது சிராய்ப்புகள்  மற்றும் அவரது வலது தோள்பட்டை மற்றும் வலது முன்கையில் காயங்கள் இருந்தன என கூறுகின்றன.

இது குறித்து சிந்து கூறியதாவது:-

நான் எனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றேன், ஏப்ரல் 26 அன்று நான் ஒரு போலீசில்  புகார் அளித்தேன். ஏப்ரல் 27 அன்று நான் அவர்களின் வீட்டிற்கு வெளியே தர்ணாவில் அமர்ந்தேன். எனது குழந்தைகளைத் திரும்பப் பெற விரும்புகிறேன்" நான்  பி.டெக் மற்றும் ஒரு எம்பிஏ பட்டம் பெற்றுள்ளேன் என கூறி உள்ளார்.


Next Story