மராட்டிய தேர்தலில் நிச்சயம் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்: பாஜக, சிவசேனா தலைவர்கள் கருத்து


மராட்டிய தேர்தலில் நிச்சயம் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்: பாஜக, சிவசேனா தலைவர்கள் கருத்து
x
தினத்தந்தி 21 Sept 2019 5:08 PM IST (Updated: 21 Sept 2019 5:08 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய தேர்தலில் நிச்சயம் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்று பாஜக, சிவசேனா தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பை, 

மராட்டியத்தில் நீண்ட கால நட்பு கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா இடையே கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் முதன் முறையாக கூட்டணி முறிந்தது. இந்த கூட்டணி முறிவை நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் புதுப்பித்து கொண்டன.  

நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற நிலையில், சட்டமன்ற தேர்தலையும் கூட்டணி அமைத்து சந்திக்க இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன. தொகுதி பங்கீட்டிற்காக இரு கட்சியின் மூத்த தலைவர்களும் பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கிடையே, மராட்டிய சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. வரும் அக்டோபர் 21 ஆம் தேதி  வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 24 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், மராட்டிய சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், மராட்டியத்தில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தொடர்வோம் என்று  பாஜக மற்றும் சிவசேனா கட்சித்தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Next Story