கடனை தள்ளுபடி செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் பேரணி; போக்குவரத்து பாதிப்பு


கடனை தள்ளுபடி செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் பேரணி; போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 22 Sept 2019 12:24 AM IST (Updated: 22 Sept 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

கடனை தள்ளுபடி செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் நேற்று நொய்டாவில் ஒன்றுகூடி அங்கிருந்து டெல்லியை நோக்கி பேரணியாக வந்தனர். விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், கரும்பு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான போலீசார் டெல்லி எல்லையான காசிபூரில் குவிக்கப்பட்டனர். அங்கு போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் பல விவசாயிகள் நெடுஞ்சாலைகளில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. கடந்த வருடம் இதேபோல நடைபெற்ற ஒரு பேரணி வன்முறையாக மாறியது குறிப்பிடத்தக்கது.


Next Story