சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ
சிறுமியின் நெற்றியில் பைத்தான் வகை பாம்பு முத்தமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
புதுடெல்லி,
செல்ல பிராணிகளை வளர்க்கும் வீடுகளில் குழந்தைகள் அவற்றுடன் விளையாடி மகிழ்வது வழக்கம். இதுபோன்ற வீடியோக்கள் வெளியாகி அவை பலரால் ரசிக்கப்படுவது உண்டு. எனினும், சமீபத்தில் வெளியான வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சிறுமி தன்னுடைய செல்ல பிராணியான பைத்தான் வகை பாம்புடன் அமர்ந்து இருக்கிறார். அந்த பாம்பு தனது தலையை 3 அடிக்கு கூடுதலாக உயர்த்தி கண்ணாடி ஜன்னலின் முன் எழுந்து நிற்கிறது. பின், அருகில் அமர்ந்திருந்த சிறுமியின் முன் நெற்றியில் முத்தமிடுகிறது.
அந்த சிறுமி எந்தவித அச்சமும் இன்றி குலுங்கி, குலுங்கி சிரிக்கிறாள். பின்பு அந்த பாம்பு அங்கிருந்து மெல்ல நகர்கிறது. மஞ்சள் நிறத்தில் அச்சமூட்டும் வகையில் அந்த பாம்பு ஏறக்குறைய 10 அடிக்கும் கூடுதலாக உள்ளது. அதனை சிறுமி கட்டியணைத்து கொள்கிறாள். செல்ல பிராணியாக அதனை வளர்த்து வருவதற்கு எதிராக ஊடகங்களில் பலரும் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ பதிவை 10 கோடியே ஒரு லட்சம் பேர் கண்டுள்ளனர்.
தொடர்ந்து வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவிற்கு 29 ஆயிரம் லைக்குகளும், 8 ஆயிரம் ரீ-டுவீட்டுகளும் கிடைத்துள்ளன. சிலர் அச்சத்துடனும், சிலர் ஆச்சரியத்துடனும் வீடியோவுக்கு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Abelungu 🤦🏾♀️
— Pearly Pops ♈️🔥 (@pearlz_mn)
pic.twitter.com/XJVg9T7VUV
Related Tags :
Next Story