ஆந்திராவில் துப்பாக்கி சண்டை: 2 பெண்கள் உள்பட 3 மாவோயிஸ்டுகள் பலி
ஆந்திராவில் நடந்த துப்பாக்கி சண்டையில், 2 பெண்கள் உள்பட 3 மாவோயிஸ்டுகள் பலியாகினர்.
அமராவதி,
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒடிசா எல்லையையொட்டிய பகுதியில் ஆந்திர மாநில நக்சலைட் எதிர்ப்பு படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். சிலேரு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட கும்மிரேவுலா என்ற இடத்தின் அருகே சென்ற போது, அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
இந்த துப்பாக்கி சண்டையில் 2 பெண்கள் உள்பட 3 மாவோயிஸ்டுகள் பலியானதாக விசாகப்பட்டினம் போலீஸ் சூப்பிரண்டு பாபுஜி அட்டடா தெரிவித்தார். கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளிடம் இருந்து 3 கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Related Tags :
Next Story