ஜம்மு காஷ்மீரில் 40 கிலோ வெடிபொருட்கள் கண்டெடுப்பு
ஜம்மு காஷ்மீரில் 40 கிலோ வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கதுவா,
ஜம்மு காஷ்மீரின் கதுவா பிராந்தியத்தில் உள்ள மல்ஹார் என்ற இடத்தில் 40 கிலோ வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் கண்டெடுத்தனர்.
உரிய நேரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், மிகப்பெரும் தாக்குதல் நடத்தும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வெடிபொருட்கள் கண்டறியப்பட்ட விவகாரம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராணுவ தளபதி பிபின்ராவத், பாலகோட் முகாமை பாகிஸ்தான் மீண்டும் பயன்படுத்த துவங்கியிருப்பதாகவும், 500 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
Related Tags :
Next Story