நடுவானில் கோவா-டெல்லி விமானத்தில் என்ஜின் கோளாறு - கோவாவுக்கு திரும்பி வந்தது


நடுவானில் கோவா-டெல்லி விமானத்தில் என்ஜின் கோளாறு - கோவாவுக்கு திரும்பி வந்தது
x
தினத்தந்தி 30 Sep 2019 8:00 PM GMT (Updated: 30 Sep 2019 7:36 PM GMT)

நடுவானில் என்ஜின் கோளாறு காரணமாக கோவா-டெல்லி விமானம் கோவாவுக்கு திரும்பி வந்தது.

பனாஜி,

கோவா மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு ஒரு தனியார் விமானம் புறப்பட்டது. நடுவானில், அதன் என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதனால், கோவா விமான நிலையத்துக்கே விமானம் திரும்பி வந்தது. அங்கு அவசரமாக தரை இறங்கியது. அதில் பயணம் செய்தவர்களில் கோவா மாநில மின்துறை மந்திரி நிலே‌‌ஷ் கப்ரலும் ஒருவர். என்ஜினில் தீப்பிடித்ததால் விமானம் திரும்பி வந்ததாக அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஆனால், அதை தனியார் விமான நிறுவனம் மறுத்துள்ளது. எந்த வகையிலும் விமான என்ஜின் தீப்பிடிக்கக் கூடியதல்ல என்றும், பயணிகள் வேறு விமானங்களில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. இருப்பினும், இந்த சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது.

Next Story