ஜம்மு காஷ்மீரில் சில அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் இருந்து விடுவிப்பு


ஜம்மு காஷ்மீரில்  சில அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் இருந்து விடுவிப்பு
x
தினத்தந்தி 2 Oct 2019 3:11 PM IST (Updated: 2 Oct 2019 3:11 PM IST)
t-max-icont-min-icon

ஜம்முவில் பஞ்சாயத்து தேர்தலுக்கு முன்னதாக சில அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

ஆகஸ்ட் 5ந்தேதி   ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு 370 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பின்னர், அங்கு  பல முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்தனர்.

 இந்த நடவடிக்கையை எதிர்கட்சிகள் மற்றும் சில சர்வதேச மனித உரிமைகள் குழுக்கள் கண்டித்தன. எவ்வாறாயினும், இந்த நடவடிக்கைகள் காஷ்மீரில் குழப்பத்தை கட்டுப்படுத்துவதற்கும் சாத்தியமான அச்சுறுத்தல்களை திறம்பட கையாள்வதற்கும் மத்திய அரசின் முயற்சியாக கூறப்பட்டது.

ஒரு நாள் முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்ததற்கான காரணங்களை மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில்  தெளிவுபடுத்தியது. அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் 'அவசியமானவை' மற்றும் 'நியாயமானது' என்று கூறியது.

இந்த நிலையில் காஷ்மீரில் ஒப்பீட்டளவில் அமைதியான நிலைமைகளை  கருத்தில் கொண்டும்,  மாநிலத்தில் நடைபெறும் தொகுதி மேம்பாட்டு கவுன்சில் பஞ்சாயத்து தேர்தல்களையும் முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் ஜம்முவில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களின் வீட்டுக் காவலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முடிவை எடுத்துள்ளது.

விடுவிக்கப்பட்ட அரசியல் தலைவர்களில் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டின்  தேவேந்தர் சிங் ராணா, ஜம்மு-காஷ்மீர் தேசிய பாந்தர் கட்சியின்  ஹர்ஷ் தேவ் சிங் மற்றும் இந்திய தேசிய காங்கிரசின்  ராமன் பல்லா ஆகியோர் அடங்குவர்.

Next Story