தேசிய செய்திகள்

குஜராத்தில் 9 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது + "||" + 9-ft-long python gobbles up cat in Gujarat village, rescued

குஜராத்தில் 9 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது

குஜராத்தில் 9 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது
குஜராத்தில் 9 அடி நீள மலைப்பாம்பு சிக்கி உள்ளது.
வதோதரா,

குஜராத்தின் வதோதரா மாவட்டத்துக்கு உட்பட்ட வெஜல்பூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் நேற்று முன்தினம் இரவு மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. பின்னர் அது அங்கு வளர்க்கப்பட்ட பூனை ஒன்றை பிடித்து விழுங்க முயன்றது.


எனினும் பூனையை மலைப்பாம்பால் விழுங்க முடியவில்லை. இதனால் தவித்துக்கொண்டிருந்த பாம்பை அக்கம்பக்கத்தினர் கண்டு சத்தம் போட்டனர். மேலும் வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர். மக்கள் கூட்டத்தை பார்த்ததும் பூனையை போட்டுவிட்டு மலைப்பாம்பு தப்பி ஓட முயன்றது.

அதற்குள் வனத்துறையினர் அங்கு வந்து, அப்பகுதி மக்களுடன் இணைந்து மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். அது 9 அடி நீளம் இருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த பாம்பை எடுத்துச்சென்ற அவர்கள், அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பத்திரமாக விட்டு விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. குஜராத்தில் ரூ.4¾ கோடி செல்லாத நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது
குஜராத்தில் ரூ.4¾ கோடி செல்லாத நோட்டுகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. குஜராத் ஜவுளி தொழிற்சாலையில் விஷவாயு கசிவு - 4 பேர் பலி
குஜராத் மாநிலத்தில் தனியார் ஜவுளி தொழிற்காலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் 4 பேர் உயிரிழந்தனர்.
3. குஜராத் மற்றும் ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
குஜராத் மற்றும் ஜம்மு காஷ்மீரில் சில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
4. குஜராத்தில் தவித்த 398 பேர் சிறப்பு ரெயிலில் மதுரை வருகை 27 பஸ்களில் அனுப்பிவைப்பு
குஜராத்தில் தவித்த 398 பேர் சிறப்பு ரெயில் மூலம் நேற்று மதுரை வந்தடைந்தனர்.
5. உடல்நிலை பாதித்த தாயை பார்க்க குஜராத்தில் இருந்து வத்திராயிருப்புக்கு மோட்டார் சைக்கிளில் வந்த என்ஜினீயர்
உடல்நிலை பாதித்த தாயை பார்ப்பதற்காக என்ஜினீயர் ஒருவர் குஜராத்தில் இருந்து 2,350 கி.மீ. பயணம் செய்து வத்திராயிருப்பு வந்துள்ளார்.