தேசிய செய்திகள்

வளர்ச்சிக்கான பயணம் தொடக்கம்; வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை தொடங்கி வைத்த அமித்ஷா பேச்சு + "||" + The journey of development has begun with Vande Bharat Express; Amit Shah

வளர்ச்சிக்கான பயணம் தொடக்கம்; வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை தொடங்கி வைத்த அமித்ஷா பேச்சு

வளர்ச்சிக்கான பயணம் தொடக்கம்; வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை தொடங்கி வைத்த அமித்ஷா பேச்சு
புதுடெல்லியில் இருந்து கத்ரா நோக்கி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை மத்திய மந்திரி அமித்ஷா இன்று தொடங்கி வைத்துள்ளார்.
புதுடெல்லி,

புதுடெல்லியில் இருந்து ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள கத்ரா நோக்கி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டு ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி அமித்ஷா, இந்தியாவில் தயாரான இந்த ரெயிலை இங்கிருந்து தொடங்கி வைப்பதில் பெருமை கொள்கிறேன்.  வேகம், அளவு மற்றும் சேவை ஆகிய கொள்கைகளை முன்வைத்து தனது இலக்குகளை அடைவதற்காக ரெயில்வே பணியாற்றி வருகிறது என கூறியுள்ளார்.

சுற்றுலாவை ஊக்குவிக்கும் முயற்சியாக தொடங்கப்பட்ட இந்த ரெயில் சேவையால் ஜம்மு மற்றும் காஷ்மீரின் வளர்ச்சிக்கான பயணம் தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்துக்கான அரசியல் பிரிவு 370 ஆனது நீக்கம் செய்யப்படுவதற்கு முன், வளர்ச்சிக்கான வழிகள் தடைப்பட்டு இருந்தன.  அடுத்த 10 ஆண்டுகளில், வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றாக ஜம்மு மற்றும் காஷ்மீர் உருமாறும் என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் டாக்டர் ஜிதேந்திரா சிங் மற்றும் டாக்டர் ஹர்ஷ வர்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நான் நலமுடன் இருக்கிறேன், எந்த நோயாலும் பாதிக்கப்படவில்லை - அமித் ஷா விளக்கம்
எனது உடல் நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் தவறானது என்று அமித்ஷா விளக்கமளித்துள்ளார்.
2. அமித்ஷாவின் வேண்டுகோளை ஏற்று டாக்டர்கள் போராட்டம் வாபஸ்
உள்துறை மந்திரி அமித்ஷாவின் வேண்டுகோளை ஏற்று, டாக்டர்கள் தங்கள் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
3. "ஊரடங்கால் உணவுப் பற்றாக்குறை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்
ரயில் மற்றும் விமான சேவைகளை தற்போது தொடங்க கூடாது என்று பிரதமர் மோடியிடம் முதல் அமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. இந்தியாவில் 15-ந் தேதி முதல் மீண்டும் ரெயில் சேவை: தயாராக இருக்குமாறு அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல்
இந்தியாவில் வருகிற 15-ந்தேதி முதல் மீண்டும் ரெயில் சேவைகளை தொடங்க தயாராக இருக்குமாறு அனைத்து மண்டலங்களுக்கும் ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
5. என்.பி.ஆர். குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை - அமித்ஷா
என்.பி.ஆர்.குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என மாநிலங்களவையில், டெல்லி கலவரம் தொடர்பான விவாதத்தில் அமித்ஷா தெரிவித்துள்ளார்.