மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவரின் மனைவி சென்ற கார் விபத்தில் சிக்கியது


மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவரின் மனைவி சென்ற கார் விபத்தில் சிக்கியது
x
தினத்தந்தி 5 Oct 2019 4:58 PM IST (Updated: 5 Oct 2019 4:58 PM IST)
t-max-icont-min-icon

மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவின் மனைவி சென்ற கார் விபத்தில் சிக்கியது.

நவிமும்பை,

மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் வருகிற 21ந்தேதி நடைபெற உள்ளது.  இந்த தேர்தலை ஆளும் பா.ஜனதா மற்றும் சிவசேனா கூட்டணி ஓரணியாகவும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் சந்திக்கின்றன.  இதனை முன்னிட்டு அங்குள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவின் குடும்பத்தினர் லோனவாலா பகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்கு இன்று சென்றுள்ளனர்.  அங்கு ஏக்வீரா தேவியை தரிசனம் செய்து விட்டு திரும்பியுள்ளனர்.  இந்நிலையில், ராஜ் தாக்கரேவின் மனைவி சர்மிளா தாக்கரே சென்ற கார் விபத்தில் சிக்கியது.

அவரது காரின் ஓட்டுனர், நவிமும்பை நகரில் உள்ள சன்படா பகுதி அருகே வந்தபொழுது எதிரே வந்த ஆட்டோவுக்கு வழிவிட முயன்று பிரேக் போட்டுள்ளார்.  இதனால் அவருக்கு பின்னால் வந்த பாதுகாப்பு வாகனம் அந்த கார் மீது மோதி விபத்திற்குள்ளானது.  காரில் ராஜ் தாக்கரேவின் செயலாளர் சச்சின் மோர் என்பவரும் இருந்துள்ளார்.  இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்திற்கு பின்பு சர்மிளா வேறொரு காரில் மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.

Next Story