49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை ரத்துசெய்ய வேண்டும்: பீகார் முதல்-மந்திரிக்கு ராஷ்டிரீய ஜனதாதளம் கோரிக்கை


49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை ரத்துசெய்ய வேண்டும்: பீகார் முதல்-மந்திரிக்கு ராஷ்டிரீய ஜனதாதளம் கோரிக்கை
x
தினத்தந்தி 6 Oct 2019 2:50 AM IST (Updated: 6 Oct 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை ரத்துசெய்ய வேண்டும் என பீகார் முதல்-மந்திரிக்கு ராஷ்டிரீய ஜனதாதளம் கோரிக்கை விடுத்துள்ளது.

பாட்னா,

நாட்டில் நடைபெற்றுவரும் வன்முறை குறித்து கவனம் செலுத்துமாறு பிரதமர் மோடிக்கு சினிமா டைரக்டர் மணிரத்னம், நடிகை ரேவதி, வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்பட 49 பிரபலங்கள் கடிதம் எழுதினார்கள். அவர்கள் மீது பீகார் மாநிலம் முசாபர்பூர் மாஜிஸ்திரேட்டு உத்தரவின்பேரில் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி ராஷ்டிரீய ஜனதாதள துணைத் தலைவர் சிவானந்த் திவாரி கூறும்போது, “நிதிஷ்குமார் ஆளும் மாநிலத்தில் ராமச்சந்திர குஹா உள்ளிட்டவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது மிகவும் வஞ்சகமானது. முதல்-மந்திரி நிதிஷ்குமார் இதுபற்றி சட்ட வல்லுநர்களிடம் கருத்து கேட்டு இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்றார். திவாரி ஏற்கனவே நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story