ரூ.8 கோடி செம்மரக்கட்டை கடத்தல்; தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது
ரூ.8 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பாக, தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டம் கால்காட் என்ற இடத்தில் உள்ள சுங்க சாவடியில் கடந்த மாதம் 15 ஆயிரத்து 500 கிலோ எடையுள்ள செம்மரக்கட்டைகளை வனத்துறையின் சிறப்பு அதிரடிப்படை கைப்பற்றியது. அவற்றை கடத்தி வந்த தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில், தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிடிபட்ட செம்மரக்கட்டைகளின் மொத்த மதிப்பு ரூ.8 கோடி ஆகும். திருமலையை சுற்றியுள்ள காட்டில் செம்மரத்தை வெட்டியதாக 3 பேரும் ஒப்புக்கொண்டனர். சென்னையில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத்துக்கு கடத்தப்பட்டபோது இவை பிடிபட்டுள்ளன.

Related Tags :
Next Story