பயங்கரவாத உள்கட்டமைப்புகளை பாகிஸ்தான் புதுப்பிக்கிறது - இந்தியாவிடம் ஆதாரம்
பயங்கரவாத உள்கட்டமைப்புகளை பாகிஸ்தான் புதுப்பிக்கிறது என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளது.
புதுடெல்லி
பாகிஸ்தான் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை புத்துயிர் அளித்து வருவதற்கான போதுமான ஆதாரங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளன என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததுள்ளன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தான் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் கருப்பு பட்டியலில் இடம் பெற்றது, மேலும் 2019 அக்டோபருக்குள் இந்த கருப்பு பட்டியலில் இடம் பெறும் அபாயத்தை தடுக்க ஒரு செயல் நடவடிக்கை திட்டம் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது.
ஆனால் பாகிஸ்தான் நிதி நடவடிக்கை பணிக்குழு "பட்டியலிடப்பட்ட அனைத்து தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முழுமையாக செயல்படுத்த போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை . குறிப்பாக லஷ்கர்-இ-தொய்பா (எல்.இ.டி), ஜமாஅத்-உத்-தாவா (ஜு.டி), மற்றும் ஃபலாஹ்-இ-இன்சானியட் பவுண்டேஷன் (எஃப்.ஐ.எஃப்) மற்றும் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் எல்லை கட்டுப்பாட்டை மீறி பயங்கரவாதிகள் ஏவப்படுவது உள்பட, பாகிஸ்தானை பயங்கரவாத தடுப்பு பட்டியலில் வைக்க உலக நிதி நடவடிக்கை பணிக்குழு முன்பு முழுமையான ஆதாரங்களை வைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான் நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்) வின் கடுமையான கண்காணிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாத உள்கட்டமைப்பை மீண்டும் உயிர்ப்பித்து வருகிறது என்பதற்கான ஆதாரங்களை அளிப்பதன் மூலம் பாகிஸ்தான் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசின் வட்டார தகவல்கள் கூறும் போது, "பாகிஸ்தான் ஏற்கனவே நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சந்தேக வளையத்தில் உள்ளது. பாகிஸ்தான் தனிப்பட்ட பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்களை ஒழிக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இந்தியா ஆதாரங்களை அளிப்பதன் மூலம் பாகிஸ்தானின் இரட்டை நிலைப்பாட்டை மேலும் அம்பலப்படுத்த விரும்புகிறோம் என கூறி உள்ளது.
இது அக்டோபர் 13 முதல் 18 வரை பாரிஸில் நடைபெறவிருக்கும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் முழுமையான அமர்வில் பாகிஸ்தானுக்கு கடுமையான சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
Related Tags :
Next Story