பிரதமரை விமர்சிப்பவர்களை “தேச விரோதிகள்”என்று கருதக்கூடாது- சசிதரூர் கண்டனம்
பிரதமரை விமர்சிப்பவர்களை “தேச விரோதிகள்” என்று கருதக்கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
திருவனந்தபுரம்
இந்தியாவில் நடக்கும் வன்முறையை கண்டித்தும், இதில் பிரதமர் நரேந்திரமோடி தலையிடக்கோரியும் திரைப்பட இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூகவியலாளர், சமூக சேவகர், திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்பட முக்கிய பிரபலங்கள் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார்கள்.
அந்த கடிதத்தில் கும்பல் வன்முறை நடத்தப்படுகின்றன. அவற்றை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்த கடிதம் விவகாரம் தொடர்பாக பீகார் போலீசார் இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தது. இதனையடுத்து திரை பிரபலங்களும், அரசியில் தலைவர்களும் தங்களது கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு "கடுமையான எதிர்ப்பு" தெரிவிக்கும் கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சசி தரூர் எழுதி உள்ளார்.
அக்டோபர் 7 தேதியிட்ட அவரது கடிதத்தில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் பிரதமரை விமர்சிப்பவர்களை “தேச விரோதிகள்”என்று கருதக்கூடாது என்று கூறி உள்ளார்.
கடிதத்தில் உங்களுடனோ அல்லது உங்கள் அரசாங்கத்துடனோ கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் கூட கருத்துச் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கான உறுதி அளிக்க வேண்டும். பிரிட்டிஷ் அரசின் கீழ் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் அவ்வாறு செய்ய தைரியம் காட்டி இருந்திருக்காவிட்டால் ஒரு சுதந்திர தேசமாக இந்தியாவின் வரலாறு வேறுபட்டதாக இருந்திருக்கும் என கூறி உள்ளார்.
Related Tags :
Next Story