புல்வாமா அவந்திபோராவில் துப்பாக்கி சண்டை: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்கள்.
ஸ்ரீநகர்
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா நகரில் இன்று நடந்த மோதலில் பாதுகாப்புப் படையினர் ஒரு பயங்கர்வாதியை கொன்றதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அவந்திபோடா புறநகரில் பயஙகரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அங்கு பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். தொடர்ந்து அங்கு துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் மற்றொரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார், அவன் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவன் ஆவான்.அவனது பெயர் உபைத் பாரூக் லோன் ஆகும்.
பாரூக் கையெறி குண்டுகள் தாக்குதல்கள் மற்றும் கடைக்காரர்கள் மற்றும் பழ உற்பத்தியாளர்களை அச்சுறுத்துதல் உள்ளிட்ட பல பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளான்.
மழை மற்றும் பனிக்காலத்தை சாதகமாக்கி இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதற்காக சுமார் 2 ஆயிரம் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் முகாம்கள் அமைத்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
ஒரு முகாமிற்கு சுமார் 50 பேர் வீதம் 20 முகாம்களில் சுமார் ஆயிரம் பேர் பயிற்சி பெற்று இந்தியாவிற்குள் ஊடுருவ தகுந்த நேரம் பார்த்து காத்திருப்பதாகவும், மேலும் இதேபோல் சுமார் ஆயிரம் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும் உளவுத்துறை தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
மேலும் ,ஜம்மு காஷ்மீரில் 200 முதல் 300 பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story