இந்தியாவை கோபப்படுத்திய காஷ்மீர் கருத்துக்களை மலேசிய பிரதமர் மீண்டும் ஆதரிக்கிறார்
இந்தியாவை கோபப்படுத்திய காஷ்மீர் கருத்துக்களை மலேசிய பிரதமர் மகாதீர் முகமது மீண்டும் ஆதரிக்கிறார்.
புதுடெல்லி,
நியூயார்க்கில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பேசிய மலேசிய பிரதமர் மகாதீர் முகமது ஜம்மு-காஷ்மீர் “படையெடுத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது” என்றும், இந்தியாவின் நடவடிக்கை “தவறானது” என்றும் கூறினார்.
இந்தியாவின் வெளிவிவகாரத் துறை செய்தித் தொடர்பாளர் கடந்த வெள்ளிக்கிழமை ஜம்மு-காஷ்மீர் விவகாரம் முற்றிலும் உள்நாட்டு விவகாரம் என்றும், மலேசியா இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் “இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்றும் கூறி இருந்தார்.
இந்த நிலையில் இன்று மலேசிய நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மகாதீர், ஐ.நா பொதுச் சபையில் இந்தியாவை விமர்சித்து தான் பேசிய காஷ்மீர் குறித்த கருத்துக்களை ஆதரித்தார். செப்டம்பர் மாதம் ரஷ்யாவில் நடந்த கிழக்கு பொருளாதார உச்சிமாநாட்டின் போது இரு தலைவர்களும் சந்தித்தபோது மோடியுடன் தான் இது பற்றி பேசியதாக கூறி உள்ளார்.
மலேசியா, இந்த விஷயத்தில் எந்தபக்கம் என்பது பற்றி இல்லை . "இந்த சிக்கலை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும் ... எங்கள் விமர்சனம் யாருடனும் இல்லை".
”நாங்கள் கருத்துக்களை வெளியிடும் போது, குறிப்பாக யாரையும் குறி வைத்து சொல்லவில்லை, ஆனால் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், வன்முறையை நாடக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்.,அது எப்போதும் எங்கள் கொள்கையாகும். வன்முறையைப் பயன்படுத்த வேண்டாம், அதற்கு பதிலாக பேச்சுவார்த்தை நடத்தவும் அல்லது நடுவர் மன்றத்திற்குச் செல்லவும் அல்லது நீதிமன்றத்திற்குச் செல்லவும்” என்று மகாதீர் கூறியதாக மேற்கோள் காட்டி மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
Related Tags :
Next Story