கள்ள நோட்டுகளை இந்தியாவுக்குள் கொண்டு வர தனது தூதரக தொடர்புகளை பயன்படுத்தும் பாகிஸ்தான்


கள்ள நோட்டுகளை இந்தியாவுக்குள் கொண்டு வர தனது தூதரக தொடர்புகளை பயன்படுத்தும் பாகிஸ்தான்
x
தினத்தந்தி 9 Oct 2019 6:29 AM GMT (Updated: 9 Oct 2019 7:27 AM GMT)

பயங்கரவாத நிதியுதவிக்காக கள்ள நோட்டுகளை இந்தியாவுக்குள் கொண்டு வர பாகிஸ்தான் தனது தூதரக தொடர்புகளை பயன்படுத்துகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கறுப்புப் பணத்தைத் தடுப்பதற்காக இந்தியா  பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.  ரூ 1000, ரூ.500  பணமதிப்பிழப்பு செய்து விட்டு ரூ 2000  மற்றும் ரூ 500 புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில் பாகிஸ்தான்  சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது அதன் துணை நிறுவனங்கள் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களுக்கும் நிதியளிப்பதற்காக சிறந்த தரமான போலி இந்திய ரூபாய் நோட்டுகளை  (FICN) தயாரிக்கவும், கடத்தவும், புழக்கத்தில் விடவும் தொடங்கியுள்ளது. 

2016 க்கு முந்தைய அமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு-கும்பல்கள், அவற்றின் சிண்டிகேட், சேனல்கள் மற்றும் வழிகளைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் இருந்து ஏராளமான கள்ள நோட்டுகள் இந்தியாவுக்குள் நுழைந்து வருவதாக மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மிகவும் ஆச்சரியப்படும் விதமாக, கள்ள நோட்டுகளை  இந்தியா கொண்டு வந்து விநியோகிக்க நேபாளம், வங்காள தேசம்  மற்றும் பிற நாடுகளில் உள்ள தூதரக தொடர்புகளை பாகிஸ்தான் தவறாகப் பயன்படுத்துகிறது.

பாகிஸ்தானின் ரகசிய அமைப்பான ஐ.எஸ்.ஐ, முந்தைய கள்ள நோட்டுகளை விட தற்போது சிறந்த தரத்துடன்  இந்த கள்ள நோட்டுகளை தயாரித்து உள்ளது  என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மே 2019 -ல், டி-கம்பெனி கூட்டாளியான யூனஸ் அன்சாரி, மூன்று பாகிஸ்தானியருடன் நேபாளம்  காத்மாண்டு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் மொத்தம்  ரூ .7.67  கோடி கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டது.

செப்டம்பர் 22 அன்று, இந்தியாவின்  பஞ்சாபில் காவல்துறை காலிஸ்தான் ஜிந்தாபாத் படைக்கு சொந்தமான சீக்கிய தீவிரவாதிகளிடமிருந்து ரூ .10 லடசம் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டது.

ஐந்து ஏ.கே 47 ரைபிள்ஸ், 30 போர் பிஸ்டல்கள், ஒன்பது கையெறி குண்டுகள், ஐந்து செயற்கைக்கோள் தொலைபேசிகள், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் இரண்டு வயர்லெஸ் செட் ஆகியவற்றை பாகிஸ்தான் சர்வதேச எல்லையில்  இருந்து ஆள் இல்லா விமானம் மூலம் அனுப்பி உள்ளது. 

மீண்டும், செப்டம்பர் 25 ஆம் தேதி, டாக்காவில் போலீசார்  ரூ. 49 லட்சம் மதிப்புள்ள  இந்திய கள்ள நோட்டுகளை கைப்பற்றினர்.

Next Story