டெல்லியில் வெங்காயத்தை தொடர்ந்து தக்காளி விலை ஏறியது


டெல்லியில் வெங்காயத்தை தொடர்ந்து தக்காளி விலை ஏறியது
x
தினத்தந்தி 10 Oct 2019 2:50 AM IST (Updated: 10 Oct 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் வெங்காயத்தை தொடர்ந்து தக்காளி விலையும் உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை உயர்ந்து காணப்பட்டது. அதைபோல் இப்போது தக்காளியும் விலை உயர்ந்து உள்ளது. அங்கு ஒரு கிலோ தக்காளி ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. கிடுகிடுவென உயர்ந்த வெங்காயம் தற்போது கிலோவுக்கு ரூ.60 ஆக குறைந்து உள்ளது.

அங்குள்ள வேளாண் கூட்டுறவு விற்பனையகத்தில் தக்காளி கிலோ ரூ.68-க்கும், மற்ற சில்லரை வியாபாரிகள் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்கின்றனர். மேலும் டெல்லியைப் போல் கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை ஆகிய பெரு நகரங்களில் முறையே ரூ.60, ரூ.54. ரூ.40-க்கும் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசாத்பூர் மொத்த விற்பனையாளர்கள் கூறும்போது, “கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து அதிகப்படியாக விற்பனைக்கு வரும் தக்காளி மழை வெள்ளம் காரணமாக குறைந்துவிட்டதே இந்த விலை உயர்வுக்கு காரணம்” என்றனர்.

Next Story