உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடிக்கு கோயில் கட்டும் இஸ்லாமிய பெண்கள்
உத்தரப் பிரதேசம், முசாபர் நகர் மாவட்டத்தில் முஸ்லிம் பெண்களில் ஒரு பிரிவினர், முத்தலாக் தடைச் சட்டத்தை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடிக்குக் கோயில் கட்ட முடிவு செய்துள்ளனர்.
முசாபர்,
இதுகுறித்து முஸ்லிம் பெண்கள் குழுவின் பிரதிநிதி ரூபி காஸ்னி நிருபர்களிடம் கூறியதாவது:-
முஸ்லிம் பெண்களுக்கு இருந்த மிகப்பெரிய தடையான முத்தலாக்கில் இருந்து மீட்ட பிரதமர் மோடிக்கு நன்றி செலுத்தப் போகிறோம். முத்தலாக்கைத் தடை செய்து எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடியை உலகமே கொண்டாடி வரும்போது, சொந்த மண்ணில் அவரைக் கொண்டாட வேண்டாமா?
இதனால் எங்களுடைய சேமிப்பைப் பயன்படுத்தி பிரதமர் மோடிக்காக நாங்கள் கோயில் கட்ட விரும்புகிறோம். இதற்கான அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்.
முஸ்லிம் பெண்கள் பிரதமர் மோடிக்கும், அவரின் கொள்கைகளுக்கும் ஆதரவாக இருக்கிறோம் என்பதை தெளிவாகக் கூறவே இதைச் செய்கிறோம்" எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்று முத்திரை குத்த வேண்டாம் என்பதையும் உலகுக்குத் தெரிவிக்க இதைச் செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story