தேசிய செய்திகள்

பீகாரில் நவீன உடைகளை அணிய மறுத்த மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவர் + "||" + Woman given triple talaq for not being modern in Patna

பீகாரில் நவீன உடைகளை அணிய மறுத்த மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவர்

பீகாரில் நவீன உடைகளை அணிய மறுத்த மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவர்
பீகாரில் நவீன உடைகளை அணிய மறுத்த மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவர் மீது பெண் புகார் கொடுத்துள்ளார்.
பாட்னா,

பீகாரில் வசித்து வரும் பெண் நூரி பாத்திமா.  கடந்த 2015ம் ஆண்டு இம்ரான் முஸ்தபா என்பவருடன் நூரிக்கு திருமணம் நடந்தது.  சில நாட்கள் கழித்து இந்த தம்பதி டெல்லிக்கு இடம் பெயர்ந்தது.

இதன்பின் சில மாதங்கள் கழித்து, டெல்லியில் உள்ள நவீன பெண்கள் அணிவது போன்று உடை அணியும்படி மனைவியிடம் இம்ரான் கூறியுள்ளார்.  சிறிய அளவிலான ஆடைகளை அணியும்படியும், இரவு விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் மற்றும் மதுபானம் குடிக்கவும் மனைவியை வற்புறுத்தி உள்ளார்.

இதற்கு மறுத்த நூரியை ஒவ்வொரு நாளும் இம்ரான் அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார்.  பல வருடங்களாக இந்த கொடுமை தொடர்ந்துள்ளது.  இதனிடையே 2 முறை கட்டாயப்படுத்தி மனைவிக்கு கருக்கலைப்பும் செய்துள்ளார்.  கடந்த சில நாட்களுக்கு முன், வீட்டை விட்டு வெளியேறும்படி மனைவியை இம்ரான் கூறியுள்ளார்.

இதற்கும் நூரி மறுத்துள்ளார்.  இதனால் அவருக்கு இம்ரான் முத்தலாக் கொடுத்து உள்ளார்.  இதுபற்றி போலீசாரிடம் நூரி புகார் அளித்து உள்ளார்.  பீகார் மகளிர் ஆணையத்திடமும் புகாரளித்து உள்ளார்.  இதனை அடுத்து அவர்கள் இம்ரானுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. அய்யம்பேட்டை அருகே மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் சாவு சாவிலும் இணை பிரியாத தம்பதி
அய்யம்பேட்டை அருகே மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் இறந்தார். சாவிலும் அந்த தம்பதி இணை பிரியாதது கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2. பிரியங்கா சோப்ரா கணவரின் கைக்கடிகாரம் ரூ.7 கோடி
பிரியங்கா சோப்ரா கணவரின் கைக்கடிகாரம் ரூ.7 கோடி மதிப்பிலானது என்று தகவல் வெளியாகி உள்ளது.
3. காரை ஏற்றி டிரைவரை கொன்ற மனைவி உள்பட 3 பேர் கைது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்
வில்லியனூர் அருகே டிரைவரை காரை ஏற்றி கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரமடைந்து இந்த கொடூர சம்பவம் நடந்து இருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
4. மனைவி, உறவினர்கள் கண் எதிரே சரக்கு ரெயில் மோதி கட்டிடத் தொழிலாளி பலி
ஆந்திராவில் உள்ள தனது குழந்தைகளை பார்க்க மனைவி மற்றும் உறவினர்களுடன் தண்டவாளத்தில் நடந்து சென்ற கட்டிடத் தொழிலாளி, சரக்கு ரெயில் மோதி பலியானார்.
5. மனைவி, உறவினர்கள் கண் எதிரே சரக்கு ரெயில் மோதி கட்டிடத் தொழிலாளி பலி
ஆந்திராவில் உள்ள தனது குழந்தைகளை பார்க்க மனைவி மற்றும் உறவினர்களுடன் தண்டவாளத்தில் நடந்து சென்ற கட்டிடத் தொழிலாளி, சரக்கு ரெயில் மோதி பலியானார்.