ராஜஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.5 ஆக பதிவு


ராஜஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.5 ஆக பதிவு
x
தினத்தந்தி 13 Oct 2019 12:53 PM IST (Updated: 13 Oct 2019 12:53 PM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் பிகானீர் மற்றும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளில் இன்று காலை 10.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளது.

நிலநடுக்கத்தினை உணர்ந்தவுடன் மற்றும் நிலநடுக்கம் பற்றிய செய்திகள் பிகானீர் பகுதியில் பரவியவுடன், பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.

எனினும், நிலநடுக்கம் பற்றிய வதந்தி செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அரசு நிர்வாகம் மக்களிடம் கேட்டு கொண்டுள்ளது.  இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

Next Story