“ராக்கெட் அனுப்புவதால் இளைஞர்களின் வயிறு நிறையாது” ராகுல்காந்தி பேச்சு
நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதால் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அது உணவளிக்காது என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
மும்பை,
288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கும், 90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டசபைக்கும் வருகிற 21-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 24-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடை பெறுகிறது.
மராட்டிய மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் இன்று ஒரே நாளில் பிரசாரம் செய்கிறார்கள்.
இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி மராட்டியம் லத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதால் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அது உணவளிக்காது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் காங்கிரஸ் அரசால் நிறுவப்பட்டது. இஸ்ரோவில் இருந்து ராக்கெட்டுகளை அனுப்ப பல ஆண்டுகள் தேவைப்பட்டன. இஸ்ரோவின் நன்மைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார் பிரதமர் மோடி.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story