பா.ஜ.க.வின் புதிய தலைவர் டிசம்பருக்குள் தேர்வு; அமித் ஷா அறிவிப்பு


பா.ஜ.க.வின் புதிய தலைவர் டிசம்பருக்குள் தேர்வு; அமித் ஷா அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Oct 2019 9:43 PM IST (Updated: 14 Oct 2019 9:43 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க.வின் புதிய தலைவர் வருகிற டிசம்பருக்குள் தேர்வு செய்யப்படுவார் என அமித் ஷா அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக உள்ள அமித் ஷா நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை மந்திரியானார்.

பா.ஜ.க.வில் ஒரு நபர் ஒரு பதவி என்ற நடைமுறை பொதுவாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  இதனால் மந்திரி பதவியேற்ற பின்பு புதிய தலைவருக்கு வழிவிட்டு அவர் பதவி விலகுவார் என கூறப்படுகிறது.

அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா அந்த பதவிக்கு வர கூடும் என்றும் பரவலாக நம்பப்படுகிறது.  புதிய தலைவர் வந்த பின்பும் பின்னணியில் இருந்து கொண்டு கட்சியை வழி நடத்த கூடிய பொறுப்பில் அமித் ஷா செயல்படுவார் என பலர் நம்புகின்றனர்.  இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அவர், இது (பா.ஜ.க.) காங்கிரஸ் கட்சியல்ல.  ஒருவரும் பின்னால் இருந்து கொண்டு கட்சியை நடத்த முடியாது என கூறினார்.

தேர்தல்கள் (கட்சி அமைப்புக்கான) நடந்து கொண்டிருக்கின்றன.  பா.ஜ.க.வின் புதிய தலைவர் டிசம்பருக்குள் பொறுப்பு ஏற்று கொண்டு கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என அமித் ஷா கூறினார்.

Next Story