வக்புவாரிய தலைவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் - உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


வக்புவாரிய தலைவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் - உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 15 Oct 2019 2:01 AM IST (Updated: 15 Oct 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தி வழக்கில் மிரட்டல் வந்தது தொடர்பாக, வக்புவாரிய தலைவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


புதுடெல்லி,

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு நியமிக்கப்பட்ட மத்தியஸ்த குழுவை சேர்ந்த ஸ்ரீராம் பஞ்சு, இந்த வழக்கில் உத்தரபிரதேச வக்பு வாரிய தலைவர் சபர் அகமது பரூக்கிக்கு மிரட்டல் வருவதால் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி, வக்புவாரிய தலைவருக்கு உத்தரபிரதேச அரசு உடனடியாக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். முஸ்லிம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராஜீவ் தவன் நீதிபதிகளிடம், “எதிர்தரப்பிடம் கேள்வி கேட்க வேண்டாம். அனைத்து கேள்விகளையும் எங்கள் தரப்பிடம் மட்டுமே கேட்க வேண்டும். நாங்கள் பதில் சொல்கிறோம்” என்றார். இதற்கு இந்து அமைப்புகள் தரப்பு மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், “இது முற்றிலும் சட்டப்படி உரிமையில்லாதது” என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

Next Story