சமூக வலைத்தள கணக்குடன் ஆதார் இணைக்கக்கோரி வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுப்பு


சமூக வலைத்தள கணக்குடன் ஆதார் இணைக்கக்கோரி வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுப்பு
x
தினத்தந்தி 15 Oct 2019 2:45 AM IST (Updated: 15 Oct 2019 2:29 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைத்தள கணக்குடன் ஆதார் இணைக்கக்கோரிய வழக்கினை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுப்பு தெரிவித்தது.

புதுடெல்லி,

பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி அஸ்வினி குமார் உபத்யாய் என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நாட்டில் உள்ள சுமார் 3½ கோடி டுவிட்டர் கணக்குகளில் 10 சதவீத கணக்குகள் போலியானவை எனக்கூறி இருந்த அவர், இது போன்ற கணக்குகளை முடக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் அதில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். எனினும் இது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடருமாறு மனுதாரரை அறிவுறுத்திய அவர்கள், இதுபோன்ற ஒரு வழக்கு ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருப்பதாகவும் கூறினர்.

Next Story