மொபைல் சேவைகள் மீட்டெடுக்கப்பட்ட சில மணிநேரங்களில், காஷ்மீரில் எஸ்எம்எஸ் சேவை ரத்து
மொபைல் சேவைகள் மீட்டெடுக்கப்பட்ட சில மணிநேரங்களில், காஷ்மீரில் எஸ்எம்எஸ் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஸ்ரீநகர்
காஷ்மீரில் 72 நாட்களுக்கு பிறகு போஸ்ட்பெய்ட் சந்தாதாரர்களுக்கான மொபைல் தொலைபேசி சேவைகள் நேற்று நண்பகலில் மீண்டும் தொடங்கின. ஆனால் இணைய வசதிகள் இல்லாமல் மாலை 5 மணியளவில் எஸ்எம்எஸ் சேவைகள் நிறுத்தப்பட்டன.
காஷ்மீரில் போஸ்ட்பெய்ட் மொபைல் போன் இணைப்புகள் மீட்டமைக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு எஸ்எம்எஸ் சேவைகள் "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக" நிறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
25 லட்சத்துக்கும் மேற்பட்ட ப்ரீபெய்ட் மொபைல் போன்கள் மற்றும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட பிற இணைய சேவைகள் தற்போது செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் குறித்து அடுத்த மாதம் முடிவு எடுக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீ கவர்னர் சத்ய பால் மாலிக் திங்களன்று இணைய சேவைகள் மிக விரைவில் தொடங்கும் என்று கூறினார். ஆனால் பாதுகாப்பு அமைப்பின் அதிகாரிகள் இந்த செயல்முறை இரண்டு மாதங்கள் வரை ஆகலாம் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story