பிரதமரின் பொதுக்கூட்டத்தில் நோட்டீஸ் வீசியவரால் பரபரப்பு


பிரதமரின் பொதுக்கூட்டத்தில் நோட்டீஸ் வீசியவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Oct 2019 4:15 AM IST (Updated: 16 Oct 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

அரியானா சட்டசபை தேர்தலையொட்டி, தானேசர் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

சண்டிகார், 

பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்தபோது, பார்வையாளராக அமர்ந்திருந்த ஒருவர் திடீரென எழுந்து, “பெண் குழந்தைகளை பாதுகாப்போம் திட்டம் என்ன ஆனது?” என்று கேள்வி எழுப்பி கோஷமிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மேடையை நோக்கி நோட்டீசுகளை வீசினார். உடனே, சாதாரண உடையில் இருந்த போலீசார் பாய்ந்து சென்று அவரை பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். என்ன நடக்கிறது என்று காணும் ஆவலில், பார்வையாளர்கள் எழுந்து நின்றபோதிலும், மோடி தொடர்ந்து பேசியபடி இருந்தார்.

கோஷமிட்ட நபர் வீசிய நோட்டீசின் மூலம், அவர் பெயர் அசோக்குமார் என்று தெரியவந்தது. அவர் பிரதமருக்கு எழுதிய ஒரு கடிதத்தில், ஆசிரியரால் பாலியல் தொந்தரவுக்கு உண்டான 8-ம் வகுப்பு மாணவியின் நிலை குறித்து கூறியுள்ளார். 

Next Story