சட்ட விரோதமாக குடியேறியவர்கள் 2024-க்குள் வெளியேற்றப்படுவார்கள்: அமித்ஷா உறுதி
இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024-ம் ஆண்டிற்குள் வெளியேற்றப்படுவார்கள் என்று அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சண்டிகார்,
இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024-ம் ஆண்டிற்குள் வெளியேற்றப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் வரும் 21-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அங்குள்ள பரிதாபாத் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா கூறியதாவது:- 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனுமதியின்றி இந்தியாவிற்குள் குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள்" என்றார்.
மேலும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழக்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டி பேசிய அமிஷ் ஷா, அதனை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறதா, இல்லையா என்பதை ராகுல்காந்தி தெளிவுப்படுத்த வேண்டும்” என்றார்.
Related Tags :
Next Story