தேசிய செய்திகள்

யாருக்காவது காஷ்மீர் செல்ல வேண்டுமா? நான் ஏற்பாடு செய்கிறேன் -பிரதமர் மோடி + "||" + History will have a mention of those who opposed abrogation of Article 370: Modi.

யாருக்காவது காஷ்மீர் செல்ல வேண்டுமா? நான் ஏற்பாடு செய்கிறேன் -பிரதமர் மோடி

யாருக்காவது காஷ்மீர் செல்ல வேண்டுமா? நான் ஏற்பாடு செய்கிறேன் -பிரதமர் மோடி
சட்டப்பிரிவு 370-ஐ நீக்கினால் காஷ்மீரை இழந்து விடுவோம், நாடே அழிந்துவிடும் என காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள் நாடு அழிந்துவிட்டதா என்ன? என்று பிரதமர் மோடி காங்கிரசை சாடினார்.
பார்லி, 

மராட்டிய சட்டசபை தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்கு பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். நேற்று அவர் ஜல்னா மற்றும் அகோலா மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இன்று பார்லியில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி கூறியதாவது:- காஷ்மீரில் இந்துக்கள் இருந்திருந்தால் சட்டப்பிரிவு 370-ஐ நாங்கள் ரத்து செய்திருக்க மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகிறார். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் இந்து - முஸ்லீம் என நீங்கள் பார்க்கிறீர்களா?

இன்னொரு காங்கிரஸ் தலைவர் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால், நாடு அழிந்துவிடும் என்றார். 3 மாதங்கள் ஆகிவிட்டன. நாடு  அழிந்துவிட்டதா?  காஷ்மீரை நாம் இழந்துவிடுவோம் என்று சொன்னார்கள், நாம் என்ன காஷ்மீரை இழந்துவிட்டோமா? நீங்கள் காஷ்மீர் செல்ல வேண்டும் என்றால் எனக்கு தெரியப்படுத்துங்கள், நான் ஏற்பாடு செய்கிறேன். 

370-ரத்துக்கு யார் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பதை வரலாறு குறிப்பிடும்.  அக்.21 ஆம் தேதி மராட்டிய தேர்தலில், நாங்கள் அனைத்து தேர்தல் வெற்றிச்சாதனைகளையும் முறியடிப்போம்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின-பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்
அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை சடங்குகள் நேற்று காலையில் தொடங்கின. அங்கு கோவிலுக்கான அடிக்கல்லை நாளை (புதன்கிழமை) பிரதமர் மோடி நாட்டுகிறார்.
2. காஷ்மீரில் மெகபூபா முப்திக்கு மேலும் 3 மாதங்கள் வீட்டுக் காவல் நீட்டிப்பு
பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மெகபூபா முப்தியின் வீட்டுக் காவலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
3. இளைஞர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது - பிரதமர் மோடி
இளைஞர்கள்பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது என பிரதமர் மோடி கூறினார்.
4. காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
5. காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: இந்தியாவுக்குள் ஊடுருவ மேலும் 300 பேர் காத்திருப்பதாக தகவல்
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர். இதுதவிர பாகிஸ்தான் எல்லையில் 300 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய காத்திருப்பதாக ராணுவ அதிகாரி தெரிவித்தார்.