தேசிய செய்திகள்

காங்கிரசுக்கு பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ்.சிடமிருந்து தேசபக்தி சான்றிதழ் தேவையில்லை -மன்மோகன் சிங் + "||" + Congress doesn’t need certificate of patriotism from BJP or RSS: Manmohan Singh

காங்கிரசுக்கு பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ்.சிடமிருந்து தேசபக்தி சான்றிதழ் தேவையில்லை -மன்மோகன் சிங்

காங்கிரசுக்கு பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ்.சிடமிருந்து தேசபக்தி சான்றிதழ் தேவையில்லை -மன்மோகன் சிங்
பாஜக தலைமையிலான மத்திய மற்றும் மராட்டிய மாநில அரசுகள் மக்கள் சார்ந்த கொள்கைகளை எடுக்க விரும்பவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.
மும்பை

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்  பேசும்போது கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சிக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதா கட்சியிடமிருந்து தேசபக்தி குறித்த சான்றிதழ் தேவையில்லை. முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னணி மாநிலமாக இருந்த மராட்டியம் இப்போது உழவர் தற்கொலைகளில் முன்னணியில் உள்ளது.

குறைந்த பணவீக்கத்தின் மீதான ஆவேசம் நம் விவசாயிகளுக்கு துயரங்களை ஏற்படுத்துகிறது. மத்திய அரசின்  ஏற்றுமதி இறக்குமதி கொள்கை விவசாயிகளின் வாழ்க்கையை மோசமாக்குகிறது. மராட்டிய மாநில தொழில்துறை மந்தநிலையின் மோசமான நிலையை அடைந்துள்ளன என கூறினார்

மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் ஆகியோரின் கீழ் பொதுத்துறை வங்கிகள் "மோசமானநிலைமையை அடைந்து இருந்தன என்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து குறித்து  அவர் பேசுகையில்,

"நான் இதைப் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஒருவர்  பொருளாதாரத்தை சரிசெய்யும் முன், அது என்ன நோய்களைக் கொண்டு இருந்தது கண்டறிய வேண்டும். ஆனால் எதிர்க்கட்சியின் மீது பழிபோடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.

மாநிலம் முழுவதும் வணிக உணர்வு குறைந்துவிட்டது மற்றும் பல வணிகங்கள் மூடப்படுவதை எதிர்கொண்டுள்ளன. எனது பதவிக் காலத்தில் சில  பலவீனங்கள் இருந்தன. ஆனால் இந்த அரசாங்கம் ஐந்தரை ஆண்டுகளாக பதவியில் இருந்து வருகிறது,  நம்மைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு அவர்கள் நம்பகமான தீர்வைக் கொண்டு வந்திருக்க வேண்டும்.

நமது மக்கள் எதிர்கொள்ளும் அசவுகரியங்களுக்கு பாஜக அரசு பெரும்  பங்களிப்பை வழங்கியுள்ளது என்று நான் நினைக்கிறேன். மூன்று நகர்ப்புற இளைஞர்களில் ஒருவர் வேலையில்லாமல் இருப்பதாக அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரசுக்கு முழுநேர தலைவர் வேண்டும் - சசிதரூர் பரபரப்பு பேட்டி
காங்கிரசுக்கு முழுநேர தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்று சசிதரூர் கூறியுள்ளார்.
2. விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் நூதன ஆர்ப்பாட்டம்
விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரசார் நூதனமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. ஏப்ரல் 15-ந்தேதிக்குள் ராகுல்காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார்?
ஏப்ரல் 15-ந்தேதிக்குள் ராகுல்காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
4. காங்கிரசில் இருந்து முன்னாள் எம்.பி. நீக்கம்
காங்கிரசில் இருந்து முன்னாள் எம்.பி. நீக்கப்பட்டார்.
5. இந்தியா உலகின் கற்பழிப்பு தலைநகரமாக மாறி உள்ளது -ராகுல்காந்தி குற்றச்சாட்டு
இந்தியா உலகின் கற்பழிப்பு தலைநகரமாக கருதப்படுகிறது என ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.