ஏர் இந்தியாவிற்கு எண்ணெய் வழங்குவதை நிறுத்தும் முடிவை எண்ணெய் நிறுவனங்கள் தள்ளி வைத்தன!


ஏர் இந்தியாவிற்கு எண்ணெய் வழங்குவதை நிறுத்தும் முடிவை எண்ணெய் நிறுவனங்கள் தள்ளி வைத்தன!
x
தினத்தந்தி 18 Oct 2019 11:14 AM IST (Updated: 18 Oct 2019 11:14 AM IST)
t-max-icont-min-icon

ஏர் இந்தியாவிற்கு எண்ணெய் வழங்குவதை நிறுத்தும் முடிவை எண்ணெய் நிறுவனங்கள் தள்ளிவைத்துள்ளன.

புதுடெல்லி, 

கடும் கடன் சுமையில் சிக்கியுள்ள அரசு விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவிற்கு, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் வழங்கி வருகின்றன. இந்த 3 நிறுவனங்களுக்கும் ஏர் இந்தியா நிறுவனம் 5 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்க வேண்டியுள்ளது.

இதில் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு மட்டும் 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிலுவையை மொத்தமாக திருப்பி செலுத்த முடியாது என்பதால், மாதம் 100 கோடி ரூபாய் வீதம் 3 நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்தது. ஆனால் இதை முறையாக பின்பற்றாததால் வெள்ளிக்கிழமை முதல், முக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்படும்  என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து இருந்தன. 

இந்த நிலையில், நிலுவையில் உள்ள தொகைகளை வழங்குவதாக ஏர் இந்தியா எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததையடுத்து எண்ணெய் விநியோகத்தை நிறுத்தும் முடிவை  எண்ணெய் நிறுவனங்கள் தள்ளிவைத்துள்ளன.

Next Story