பயிற்சி கல்லூரியில் 50 போலீசாருக்கு வாந்தி-பேதி
பயிற்சி கல்லூரியில் 50 போலீசாருக்கு வாந்தி-பேதி ஏற்பட்டது.
இம்பால்,
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் மாநில போலீஸ் பயிற்சி கல்லூரி உள்ளது. போலீசாருக்கு சிற்றுண்டி உணவாக சோயா பீன்ஸ் வழங்கப்பட்டது. அந்த சோயா பீன்ஸ் அழுகி இருந்திருக்கிறது. அதை சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு இரவு வயிற்றுப்போக்கும், காய்ச்சலும் ஏற்பட்டது.
இதுகுறித்து பயிற்சி கல்லூரி தலைமை அதிகாரி டுட்சானா கூறும்போது, “சிற்றுண்டியாக வழங்கப்பட்ட சோயா பீன்ஸ், கல்லூரி சமையல் அறையில் செய்யப்பட்டது அல்ல, மாறாக ஒரு தனியார் உணவகத்தில் வாங்கப்பட்டது. அது அழுகி இருந்ததை அதிகாரிகள் கவனிக்கவில்லை. உடல்நிலை சரியில்லாமல் போன போலீசார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் அழுகிய சோயா பீன்ஸ் மாதிரியை உணவு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறோம்” என்றார்.

Related Tags :
Next Story