தாவூத் இப்ராகிம் கூட்டாளியுடன் வர்த்தக தொடர்பு: முன்னாள் மத்திய மந்திரியிடம் அமலாக்கத்துறை விசாரணை


தாவூத் இப்ராகிம் கூட்டாளியுடன் வர்த்தக தொடர்பு: முன்னாள் மத்திய மந்திரியிடம் அமலாக்கத்துறை விசாரணை
x
தினத்தந்தி 19 Oct 2019 2:52 AM IST (Updated: 19 Oct 2019 2:52 AM IST)
t-max-icont-min-icon

தாவூத் இப்ராகிம் கூட்டாளியுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்த முன்னாள் மத்திய மந்திரியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பிரபுல் பட்டேலுக்கும், நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான இக்பால் மிர்ச்சிக்கும் வர்த்தக தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக அக்டோபர் 18-ந்தேதி(நேற்று) விசாரணைக்கு ஆஜராகும்படி பிரபுல் பட்டேலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்பேரில் பிரபுல் பட்டேல் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

Next Story