மத்திய மந்திரி சந்தோஷ் கங்வாரின் தனி செயலாளர் விபத்தில் பலி


மத்திய மந்திரி சந்தோஷ் கங்வாரின் தனி செயலாளர் விபத்தில் பலி
x
தினத்தந்தி 19 Oct 2019 2:34 PM IST (Updated: 19 Oct 2019 2:34 PM IST)
t-max-icont-min-icon

மத்திய மந்திரி சந்தோஷ் கங்வாரின் தனி செயலாளர் விபத்தில் பலியானார்.

ஷாஜகான்பூர்,

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை மந்திரியாக இருப்பவர் சந்தோஷ் கங்வார்.  இவரது தனி செயலாளராக இருப்பவர் பிரிஜேஷ் குமார் திவாரி (வயது 44).

இவர் பரூக்காபாத் நகரில் இருந்து பரேலி நோக்கி காரில் சென்று கொண்டு இருந்துள்ளார்.  அந்த கார் மத்னாபூர் அருகே வந்தபொழுது, முன்னால் இருந்த லாரி ஒன்றின் மீது மோதியது.

இந்த சம்பவத்தில் திவாரி சம்பவ இடத்திலேயே பலியானார்.  அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

Next Story