பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் ‘காமெடி சர்க்கஸ் நடத்தக்கூடாது’ - மத்திய அரசுக்கு பிரியங்கா கடும் தாக்கு
மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட்டரி்ல் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்த ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு பெறும் அபிஜித் பானர்ஜி, இந்திய பொருளாதார மந்தநிலை குறித்து சமீபத்தில் சில கருத்துகளை வெளியிட்டு இருந்தார். ஆனால் அவர் ஒரு இடதுசாரி சிந்தனையாளர் எனவும், அவரது சிந்தனைகளை ஏற்கமாட்டோம் என்றும் மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயல் கூறினார்.
இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று பதிலடி கொடுத்து உள்ளார். பயணிகள் வாகன விற்பனை கடந்த மாதம் 20 சதவீதம் குறைந்துள்ளது என்ற செய்தியை தனது டுவிட்டரில் பகிர்ந்திருந்த அவர், இது தொடர்பாக மத்திய அரசை கடுமையாக தாக்கி இருந்தார்.
அவர் கூறுகையில், ‘பா.ஜனதா தலைவர்கள் தங்கள் சொந்த பணிகளை செய்வதற்கு பதிலாக, பிறரின் சாதனைகளை மறுப்பதில்தான் கவனத்தை செலுத்தி வருகின்றனர். நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவர் தனது பணியை நேர்மையாக செய்துள்ளார், வெற்றியும் பெற்றிருக்கிறார். நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. அதை மேம்படுத்துவதுதான் உங்கள் பணி. மாறாக காமெடி சர்க்கஸ் நடத்துவது அல்ல’ என காட்டமாக குறிப்பிட்டு இருந்தார்.

भाजपा नेताओं को जो काम मिला है उसको करने की बजाय दूसरों की उपलब्धियों को झुठलाने में लगे हैं। नोबेल पाने वाले ने अपना काम ईमानदारी से किया, नोबेल जीता।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 19, 2019
अर्थव्यवस्था ढही जा रही है। आपका काम उसको सुधारना है न कि कॉमेडी सर्कस चलाना।https://t.co/DfZXAMmaxg
Related Tags :
Next Story