நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள அபிஜித் பானர்ஜி டெல்லியில் தான் படித்த பல்கலைக்கழகத்தை பார்வையிட்டார்


நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள அபிஜித் பானர்ஜி டெல்லியில் தான் படித்த பல்கலைக்கழகத்தை பார்வையிட்டார்
x
தினத்தந்தி 19 Oct 2019 10:15 PM GMT (Updated: 19 Oct 2019 8:21 PM GMT)

நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள அபிஜித் பானர்ஜி டெல்லி சென்றார். அங்கு தான் படித்த பல்கலைக்கழகத்தை அவர் பார்வையிட்டார்.

புதுடெல்லி,

அமெரிக்க வாழ் இந்திய பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் மைக்கேல் கிரெமர் ஆகியோருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது

கொல்கத்தாவை சொந்த ஊராக கொண்ட அபிஜித் பானர்ஜி, டெல்லியில் ஜே.என்.யூ. என அழைக்கப்படுகிற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்து, 1983-ம் ஆண்டு முதுகலை பட்டம் பெற்றவர் ஆவார்.

நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அபிஜித் பானர்ஜி, இந்தியா வந்துள்ளார்.

அவர் நேற்று டெல்லி சென்றார். அங்கு தான் படித்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு சென்று பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து அவர் துணைவேந்தர் எம்.ஜெகதீஷ் குமாரை சந்தித்து பேசினார்.

Next Story