“அரசியல் காரணங்களுக்காக தவறாக பயன்படுத்தி விட்டேன்” - கோவிலில் மன்னிப்பு கேட்ட முன்னாள் மந்திரி
அரசியல் காரணங்களுக்காக கோவிலை தவறாக பயன்படுத்தி விட்டேன் என்று கோவிலில் கர்நாடக முன்னாள் மந்திரி மன்னிப்பு கேட்டார்.
மைசூரு,
கர்நாடகத்தில் நடந்து வந்த காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் இருந்து திடீரென 17 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் ஆட்சி கவிழ்ந்தது. ராஜினாமா செய்தவர்களில் முக்கியமானவர் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவராக இருந்த எச்.விஸ்வநாத்.
எச்.விஸ்வநாத் பா.ஜனதாவிடம் விலைபோய் விட்டதாகவும், தனது பதவியை ராஜினாமா செய்வதற்காக பா.ஜனதாவிடம் இருந்து அவர் ரூ.25 கோடி பெற்றதாகவும் முன்னாள் மந்திரி சா.ரா.மகேஷ் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
ஆனால் இதை மறுத்த எச்.விஸ்வநாத், நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை, அதை நிரூபிக்க சாமுண்டீஸ்வரி அம்மன் முன்பு சத்தியம் செய்ய தயார் என்று சவால் விட்டார். அதை சா.ரா.மகேசும் ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து எச்.விஸ்வநாத்தும், சா.ரா.மகேசும் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்தனர். ஆனால் எச்.விஸ்வநாத் சத்தியம் செய்யாமல் ஏமாற்றிவிட்டார்.
இந்த நிலையில் முன்னாள் மந்திரி சா.ரா.மகேஷ் திடீரென சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வந்தார். அவர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் அரசியல் காரணங்களுக்காக சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலை தவறாக பயன்படுத்தி விட்டேன். நான் செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து அருளும்படி சாமுண்டீஸ்வரி தேவியிடம் நான் கோரிக்கை விடுத்துள்ளேன். நான் செய்த தவறு என்னுடைய மனசாட்சியை மிகவும் உறுத்தியது.
இனிமேல் அரசியல் காரணங்களுக்காக சாமுண்டீஸ்வரி அம்மனையும், கோவிலையும் தவறாக பயன்படுத்த மாட்டேன். நான் செய்த தவறை என் மனது ஒப்புக்கொள்ளவில்லை. அதனால்தான் மன்னிப்பு கேட்டுள்ளேன். அதேபோல் மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதனை மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி கோரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story