அபிஜித் பானர்ஜி குறித்து விமர்சனம்: பியூஸ் கோயலை கடுமையாகச் சாடிய ராகுல் காந்தி


அபிஜித் பானர்ஜி குறித்து விமர்சனம்: பியூஸ் கோயலை கடுமையாகச் சாடிய ராகுல் காந்தி
x
தினத்தந்தி 20 Oct 2019 11:20 PM IST (Updated: 20 Oct 2019 11:20 PM IST)
t-max-icont-min-icon

அபிஜித் பானர்ஜி குறித்து விமர்சனம் செய்த மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயலை ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

புதுடெல்லி,

இந்த ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு பெறும் அபிஜித் பானர்ஜி, இந்திய பொருளாதார மந்தநிலை குறித்து சமீபத்தில் சில கருத்துகளை வெளியிட்டு இருந்தார். ஆனால் அவர் ஒரு இடதுசாரி சிந்தனையாளர் எனவும், அவரது சிந்தனைகளை ஏற்கமாட்டோம் என்றும் மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயல் கூறி இருந்தார்.

இந்நிலையில் அபிஜித் பானர்ஜிக்கு  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில், “அன்புள்ள திரு பானர்ஜி, இந்த பெரியவர்கள் வெறுப்பால் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள், ஒரு தொழில்முறை என்னவென்று தெரியாது. நீங்கள் 10 ஆண்டுகளாக முயற்சித்தாலும் அதை அவர்களுக்கு விளக்க முடியாது. உங்களின் பணியால் லட்சக்கணக்கான மக்கள் பெருமை கொள்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story