கர்நாடக போலீசாருக்கு சம்பள உயர்வு


கர்நாடக போலீசாருக்கு சம்பள உயர்வு
x
தினத்தந்தி 21 Oct 2019 1:19 AM IST (Updated: 21 Oct 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக போலீசாருக்கு சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் போலீசாரின் சம்பள விகிதத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி ராகவேந்திர அவுராத்கர் தலைமையிலான குழு சம்பள உயர்வு அறிக்கையை அரசிடம் அளித்தது. இதன்படி சம்பள உயர்வு வழங்க முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதன்பிறகு எடியூரப்பா தலைமையில் அமைந்த பா.ஜனதா அரசு, இந்த முடிவை ரத்து செய்தது. இதனால் போலீசார் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்தநிலையில் தீபாவளி பரிசாகவும், போலீஸ் தியாக தினத்தையொட்டியும் போலீசாருக்கு சம்பள உயர்வு வழங்க முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

இந்த சம்பள உயர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் போலீசாருக்கு ரூ.34,267 ஊதியம் கிடைக்கும். இதற்கு முன்பு ரூ.30,427 ஆக இருந்தது என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

Next Story