தேசிய செய்திகள்

கன்றுக்குட்டியை வேட்டையாட வந்த சிறுத்தையை பிடித்த விவசாயி + "||" + Leopard farmer who came to hunt the calf

கன்றுக்குட்டியை வேட்டையாட வந்த சிறுத்தையை பிடித்த விவசாயி

கன்றுக்குட்டியை வேட்டையாட வந்த சிறுத்தையை பிடித்த விவசாயி
கன்றுக்குட்டியை வேட்டையாட வந்த சிறுத்தையை விவசாயி ஒருவர் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ஒடெராயனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தப்பா பணகார். விவசாயியான இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள அறையில் பட்டுக்கூடு வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் அதில் ஒரு கன்றுக்குட்டியை கட்டி வைத்துவிட்டு வீட்டில் படுத்து தூங்கினார்.


நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு சிறுத்தை பட்டுக்கூடு வளர்ப்பு கூடத்திற்குள் நுழைந்தது. இதனால் கன்றுக்குட்டியும், தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசுமாடுகளும் கத்தியதால் சிவானந்தப்பா பணகார் அங்கு சென்று பார்த்தார். அப்போது சிறுத்தை கன்றுக்குட்டியை வேட்டையாட முயன்று கொண்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அந்த கூடத்தின் கதவை வெளிப்பக்கமாக பூட்டினார். இதைப்பார்த்த சிறுத்தை வேகமாக ஓடி வந்து கதவை முட்டியது. இருப்பினும் அதனால் முடியவில்லை. முடிவில் அது அந்த அறைக்குள் சிக்கிக் கொண்டது. இதையடுத்து அவர் தகவல் தெரிவித்தன்பேரில், வனத்துறையினரும், போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். பின்பு அவர்கள் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்தனர். பின்பு சிறுத்தையை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தாளவாடி அருகே அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது
தாளவாடி அருகே அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது.
2. ராமநாதபுரம் அருகே பறவைகளை நூதன முறையில் வேட்டையாடியவர் கைது
ராமநாதபுரம் அருகே பறவைகளை நூதன முறையில் வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டார்.
3. தாளவாடி அருகே கோழி-ஆட்டை கவ்விச்சென்ற சிறுத்தை
தாளவாடி அருகே குட்டியுடன் வந்த சிறுத்தை கோழி-ஆட்டை கவ்விச்சென்றது.
4. தாளவாடி அருகே ரோட்டில் நிதானமாக நடந்து சென்ற சிறுத்தை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
தாளவாடி அருகே ரோட்டில் சிறுத்தை ஒன்று நிதானமாக நடந்து சென்றதை கண்டதும், அங்கு சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
5. தோட்டத்துக்குள் புகுந்து ஆட்டை கவ்வி சென்ற சிறுத்தை: பொதுமக்கள் பீதி
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து ஆட்டை, சிறுத்தை கவ்வி சென்றது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.