ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்


ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்
x
தினத்தந்தி 21 Oct 2019 5:40 PM IST (Updated: 21 Oct 2019 5:40 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் வீடுகள் பல சேதமடைந்தன.

ஸ்ரீநகர்,

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. எல்லையில் நேற்று அத்துமீறிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம், பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்று அவர்களது 3 முகாம்களை அழித்தது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 10 பேர்  உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் இதனை மறுத்தது.

இந்தநிலையில்,  குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட தங்தார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் அப்பகுதி வீடுகள் பல இடிந்து சேதமடைந்தன. பூஞ்சில் கஸ்பா மற்றும் கிர்னி பகுதிகளில் இன்று சுமார் மாலை 3.45 மணிக்கு பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபட்டது.

Next Story