தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு - மராட்டியம், அரியானாவில் ஆட்சி யாருக்கு?
மராட்டியம், அரியானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
மும்பை,
மராட்டியம், அரியானா மாநில சட்டசபை தேர்தல்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இரு மாநிலங்களிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.
288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாக போட்டியிட்டன. 90 உறுப்பினர்களை கொண்ட அரியானாவில், ஆளும் பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஜனநாயக் ஜனதா ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ஆங்கில தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ளன. இதன் விவரம் வருமாறு:-
அரியானா
* டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் அரியானாவில் பாஜக 71 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. காங்கிரஸ் 11 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ரிபப்ளிக் டிவி மற்றும் ஜான்-கி-பாத் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக 52 முதல் 63 தொகுதி வரை வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 15 முதல் 19 தொகுதி வரையிலும் இந்திய தேசிய லோக்தள் ஒரு இடத்திலும், ஜனநாயக மக்கள் கட்சி 9 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* சிஎன்.என் தொலைக்காட்சி, இப்சாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் அரியானாவில் பாஜக 75 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பிற கட்சிகள் 5 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இந்தியா டுடே ஆக்சிஸ் கருத்துக் கணிப்பிலும் அரியானாவில் மீண்டும் பாஜகவே ஆட்சியைக் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.
மராட்டியம்
* டைம்ஸ் நவ் டிவி வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் மகாராஷ்டிராவில் பாஜக சிவசேனா கூட்டணி 216 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 65 தொகுதிகளும், பிற கட்சிகளுக்கு 7 தொகுதிகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இந்தியா டுடே டிவி மற்றும் ஆக்சிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பில் பாஜக கூட்டணி 166 முதல் 194 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 112 முதல் 140 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ரிபப்ளிக் டிவி மற்றும் ஜான்-கி-பாத் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக 142 தொகுதி வரையிலும் சிவசேனா 88 தொகுதி வரையிலும் வெற்றி பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், தேசியவாத கூட்டணிக்கு 59 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் பிற கட்சிகள் 12 தொகுதி வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* சிஎன்.என் டிவி மற்றும் இப்சாஸ் நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 243 தொகுதிகளிலும் , காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் பிற கட்சிகள் 4 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story