கனடா பிரதமராக மீண்டும் தேர்வு: ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து


கனடா பிரதமராக மீண்டும் தேர்வு: ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 22 Oct 2019 7:09 PM IST (Updated: 22 Oct 2019 7:09 PM IST)
t-max-icont-min-icon

கனடா பிரதமராக மீண்டும் தேர்வு பெற்றுள்ள ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கனடாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 338 உறுப்பினர்களை கொண்ட கனடா மக்களவைக்கு தேர்தல்  நடைபெற்று முடிவுகள்  வெளியாகியுள்ளன. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஷீரின் கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களில் வென்றுள்ளது.

லிபரல் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் சிறு கட்சிகளுடன் இணைந்து ஜஸ்டின் ட்ரூடோ கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளார். இந்த தேர்தல் வெற்றியை லிபரல் கட்சியினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், கனடா பிரதமராக மீண்டும் தேர்வாகியுள்ள ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டரில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “ஜனநாயகத்தின் மீதான அர்ப்பணிப்பு, மதிப்புகள் மற்றும் பன்முகத்தன்மை  ஆகியவைகளால் இந்தியாவும் கனடாவும் இணைக்கப்படுகின்றன. ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எனது வாழ்த்துக்கள். இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story