டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் - பீகார் முதல்வர்


டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் - பீகார் முதல்வர்
x
தினத்தந்தி 23 Oct 2019 6:01 PM IST (Updated: 23 Oct 2019 6:01 PM IST)
t-max-icont-min-icon

டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் ஐக்கிய ஜனதா தள கட்சி நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் பேசினார். அப்போது, டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றார்.  

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ் குமார், டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்து இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.  ஏற்கனவே, டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, மாநில அந்தஸ்து அளிக்கக் கோரி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருவது  கவனிக்கத்தக்கது. 

Next Story