ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர்ந்தனர்


ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர்ந்தனர்
x
தினத்தந்தி 24 Oct 2019 12:24 AM IST (Updated: 24 Oct 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரகுபர் தாஸ் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேர், நேற்று பா.ஜனதாவில் இணைந்தனர்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுக்தியோ பகத், மனோஜ் யாதவ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த குணால் சாரங்கி, ஜெயபிரகாஷ் பாய் படேல். சுயேச்சை எம்.எல்.ஏ. பானுபிரதாப் சாகி ஆகியோர் பா.ஜனதா அலுவலகத்தில் முதல்-மந்திரி ரகுபர் தாஸ் முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தனர். ஜார்க் கண்ட் மாநில முன்னாள் டி.ஜி.பி. டி.கே.பாண்டே, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சுசித்ரா சின்கா, ஆர்.பி.சின்கா ஆகியோரும் பா.ஜனதாவில் இணைந்தார்.


Next Story