பேராயருக்கு எதிராக கன்னியாஸ்திரி புகார் - விசாரிக்க பெண்கள் ஆணையம் உத்தரவு


பேராயருக்கு எதிராக கன்னியாஸ்திரி புகார் - விசாரிக்க பெண்கள் ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 24 Oct 2019 1:48 AM IST (Updated: 24 Oct 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைத்தளங்களில் வரும் அச்சுறுத்தல் காரணமாக, பேராயருக்கு எதிராக கன்னியாஸ்திரி அளித்துள்ள புகாரை விசாரிக்க பெண்கள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டயம்,

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த பேராயர் பிராங்கோ மூலக்கல் மீது ஒரு கன்னியாஸ்திரி கடந்த ஆண்டு பாலியல் புகார் கொடுத்தார். அதன்பேரில், பேராயர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், பேராயருக்கு எதிராக கேரள மாநில பெண்கள் ஆணையம், தேசிய பெண்கள் ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவற்றுக்கு கன்னியாஸ்திரி புகார் மனு அனுப்பி வைத்துள்ளார்.

அதில், பேராயரும், அவருடைய ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் தன்னைப்பற்றி அவதூறாக விமர்சித்து வருவதாகவும், அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த புகாரை விசாரிக்குமாறு கேரள மாநில இணையதள குற்றப்பிரிவு போலீசுக்கு கேரள மாநில பெண்கள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், 10 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீஸ் டி.ஜி.பி.யை கேட்டுக்கொண்டுள்ளது.

Next Story