ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது.
ராஞ்சி,
ஜார்க்கண்டில் பா.ஜனதா அரசின் பதவி காலம் வரும் ஜனவரி 5 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. எனவே, அதற்குள் சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
இந்த சூழலில், ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை இன்று மாலை 4.30 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பையும் சேர்த்தே தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று ஊகங்கள் பரவிய நிலையில், ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் தேதி மட்டுமே அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story