இந்தியா - ஜெர்மனி இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது


இந்தியா - ஜெர்மனி இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது
x
தினத்தந்தி 1 Nov 2019 9:25 AM GMT (Updated: 1 Nov 2019 9:25 AM GMT)

டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் முன்னிலையில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

புதுடெல்லி

மூன்று நாள் அரசு முறைப்பயணமாக  ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்  இந்தியா வந்துள்ளார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் வரவேற்றனர்.

இந்தியா வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், மாபெரும் நாடான இந்தியாவின் பன்முகத்தன்மையை மிகவும் மதிப்பதாகவும், இந்தியாவும்-ஜெர்மனியும் நெருக்கமான உறவைப் பேணுவதாகவும்  ஏஞ்சலா மெர்க்கல் அப்போது குறிப்பிட்டார். 

ஜனாதிபதி  மாளிகையில் அளிக்கப்பட்ட வரவேற்பைத் தொடர்ந்து, ராஜ்காட் சென்ற ஏஞ்சலா மெர்க்கல், மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

மூன்று நாள் அரசு முறைப்பயணமாக தமது அமைச்சர் குழுவுடன் டெல்லி வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், இன்று பிரதமர் மோடியுடன் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.  இந்த பேச்சுவார்த்தையை அடுத்து இந்தியா ஜெர்மனி இடையே 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், ஏஞ்சலா மெர்க்கலுடன் வந்திருந்த ஜெர்மன் குழுவினர் பங்கேற்றனர். இதேபோல, பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர்  பங்கேற்றனர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு தலைவர்கள் முன்னிலையில், இந்தியா-ஜெர்மனி இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Next Story